நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஜி தமிழ் மகாநடிகை இறுதிச் சுற்றில் சாந்தினி கோர்

கோலாலம்பூர்:

மலேசிய நடிகை சாந்தினி கோர், ஜி தமிழ் தொலைக்காட்சி நடத்தும் மகாநடிகை போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதியாகியுள்ளார்.

3 மாதங்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சாந்தினி கோர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, தனது திறமையை நிரூபித்தார்.

ஜி தமிழ் மகாநடிகை என்பது ஜி தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ஒரு பிரபலமான நடிப்பு போட்டி.

இந்தப் போட்டியில், தனித்துவமான, திறமையான நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்களின் நடிப்புத் திறன்களை ஊதியமாக மதிப்பிடப்படுவார்கள். 

போட்டி பொதுவாக மிகுந்த பிரபலத்தையும், கவனத்தையும் பெற்றுள்ளது, ஏனெனில் இது துடிப்பும், திறமையும் உள்ள நடிகர்களை ஒன்றிணைக்கிறது.

சாந்தினி கோர், சென்னையில் தங்கி இந்த போட்டியில் கலந்துகொள்கிறார். ஒவ்வொரு சுற்றிலும் நீதிபதிகளின் பாராட்டுகளை பெற்று, இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். 

அவர் ஒவ்வொரு சுற்றையும் திறன் பட கையாண்டு இந்நிகழ்ச்சியின், முன்னணி போட்டியாளராக முன்னேறியுள்ளார்.

சாந்தினியின் இந்த அற்புதமான அடைவுகள், மலேசியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளன.

இப்போது, அவர் மகாநடிகை பட்டத்தை வெல்லும் இறுதிப்போட்டியில் கலந்து கொள்கிறார்.

இந்த வெற்றியுடன், சாந்தினி கோர் அதன் பெருமையை மேலும் உயர்த்தி, மலேசியக் கலை உலகில் தனது பெயரை விளங்கச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset