நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலேசியாவில் வசூல் சாதனை படைக்கும் ‘மஜகஜராஜா’ படம்: 2-ஆவது வாரத்தைத் தொட்டது

கோலாலம்பூர்:

எம்எஸ்கே சினிமாஸ் நிறுவனம் வெளியிட்ட ‘மஜகஜராஜா’ திரைப்படம் மலேசியா திரையரங்குகளில் பெரிய வெற்றியைக் கண்டுள்ளது.

50க்கும் அதிகமான திரையரங்குகளில் தற்போது 2ஆவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடி வரும் இந்தத் திரைப்படம், நகைச்சுவையும் ஆக்‌ஷன் காட்சிகளும் சேர்ந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இத்திரைப்படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக வருவதால் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.

மனோபாலா மற்றும் சந்தானம் கூட்டணி, ரசிகர்களிடையே தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது.

“தமிழ்நாட்டை போல, இங்கும் இத்திரைப்படத்திற்கு மக்கள் வழங்கும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த திரைப்படம் குடும்பத்துடன் கண்டு களிக்க வேண்டிய பொங்கல் திரைப்பொருளாக இருக்கின்றது.

நகைச்சுவை மட்டுமன்றி, ஆக்‌ஷன் காட்சிகளும் மிக அதிரடியாக உள்ளன. மகத்தான ஆதரவு வழங்கும் ரசிகர்களுக்கு நன்றி!” என எம்எஸ்கே சினிமாஸ் நிர்வாகி சாரதா சிவலிங்கம் மகிழ்ச்சி தெரிவித்தார்

ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு காட்சியில், பங்கேற்ற ஊடகவியலாளர்கள் இத்திரைப்படத்தை பெரிதும் பாராட்டினர். மேலும் அது அதன் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தியது.

‘மஜகஜராஜா’ திரைப்படம், அதன் அற்புதமான கதை, நகைச்சுவை, ஆக்‌ஷன் காட்சிகளால், மலேசியாவில் மிகப்பெரிய வெற்றியை குவித்து, ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset