நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிக் பாஸ் 8 தொடரின் வெற்றியாளரானார் முத்துக்குமரன்

சென்னை: 

பிக் பாஸ் 8 தொடரின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சவுந்தர்யாவுக்கு 2-ஆவது இடத்தைப் பெற்றார்.

மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் விஷால் மூன்றாவது இடம் பெற்றுள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி பெற்ற முத்துக்குமரனுக்கு, நடிகர் விஜய் சேதுபதி கிண்ணத்தை வழங்கினார். 

40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் அவருக்குப் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

இந்தக் கிண்ணம் தன்னுடையது மட்டும் இல்லை. எங்கள் 24 பேருடையதும் கூட. தன்னால் வெல்லமுடியும் என்றால், அனைவராலும் வெல்ல முடியும்.

தன்னைத் திட்டித் திருத்தி இந்த இடத்திற்கு கொண்டு வந்த உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றி என முத்துக்குமரன் தெரிவித்தார்.

முத்துக்குமரன் இந்த வெற்றிக்குத் தகுதியானவர் மட்டும் இல்லை பொருத்தமானவரும் கூட என்று பொது மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset