நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது: மும்பை காவல் துறை

மும்பை: 

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்திய சம்பவத்தில் தொடர்புடைய நபரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.

புதரில் பதுங்கியிருந்த அவரை கைது செய்ததாகவும், அவர் வங்க தேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

அவரது பெயர் ஷெரிபுல் இஸ்லாம் என்றும் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து கடந்த 5 மாதங்களாக மும்பையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

நடிகர் சைஃப் அலிகான் வீட்டின் தீத் தடுப்பு நுழைவாயில் மூலம் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.

அப்போது நடிகர் சைஃப் அலிகானையும், பெண் பணியாளரையும் அவர் தாக்கியுள்ளார் என்று மும்பை போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, வீட்டுக்குள் புகுந்த நபர் வீட்டினுள் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த நகைகள் எதையும் எடுக்கவில்லை என்று சைஃப் அலி கானின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான கரீனா கபூர் போலீஸில் வக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த நபர் சைஃபிடம் மிகவும் மூர்க்கமாக நடந்துகொண்டார். அவரை பல முறை கத்தியால் குத்தினார். ஆனால், வீட்டினுள் மேசை மீது வைக்கப்பட்டிருந்த நகைகள் எதையும் அந்த நபர் எடுக்கவில்லை. அவை அனைத்தும் வைத்த இடத்திலேயே இருந்தன என்று தனது வாக்குமூலத்தில் கரீனா குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset