
செய்திகள் இந்தியா
ரூபாய் மதிப்பு சரிவடைந்ததற்கு ஒன்றிய அரசு விளக்கமளிக்க வேண்டும்: பிரியங்கா
புது டெல்லி:
இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் குறைந்திருப்பது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.
அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 86.04 ஆக உள்ளது. இதுவரை இல்லாத குறைவான மதிப்பாகும்.
பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ரூ. 58 ஆக இருந்தபோது நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். எந்தவொரு நாட்டின் ரூபாய் மதிப்பும் இந்த அளவுக்கு சரிந்ததில்லை என்றும் விமர்சித்திருந்தார்.
இன்றைக்கு அவர் பிரதமராக இருக்கும்போது, இந்திய ரூபாய் படைத்த அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து நாட்டு மக்களிடம் அவர் பதிலளிக்க வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:56 pm
புதிய சுங்கக் கட்டண திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய அரசு
February 6, 2025, 9:51 pm
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
February 5, 2025, 10:47 pm
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
February 5, 2025, 10:17 pm
கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am