நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு துறை குறித்து மாணவர்கள் முழு விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

சென்னை:

செயற்கை நுண்ணறிவு துறை குறித்து மாணவர்கள்  முழு விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும்.

மஇக துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

நாளைய உலகம் முழுமையாக செயற்கை நுண்ணறிவு சார்ந்திருக்கும்.

இதனால் இன்றைய மாணவர்கள் அதில் அதிக அக்கறையும் அதேவேளை விழிப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு நுட்பம் இப்பொழுதே நம்மை ஆட்கொண்டு விட்டது. சமூக வளைதளங்களில் இந்த நுட்பம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவில் நல்லதும் உண்டு. தீமையும் உண்டு. ஆகையால் நாம்தான் விழிப்புடன் அதைக் கையாள வேண்டும்.

குறிப்பாக, எதிர்கால ஆளுமையராக உருமாறும் வேளையில் சந்திக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை, மாணவர்கள் நிகழ் காலத்தில் கற்க வேண்டும்.

தமிழ் நாட்டு உயர்க்கல்வி மாணவர்கள், வெளிநாட்டில் கற்பதற்கான வாய்ப்பு பற்றிய கருத்தரங்கை ஜெய்பீம் அறக்கட்டளை சென்னையில்  ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோஸ்ரீ சரவணன் இதனை கூறினார்.

தமிழ் நாட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இலங்கை முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset