நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புளோரிடாவில் தரையிறங்கிய ஜெட் ப்ளூ விமானத்தின் லேண்டிங் கியர் பெட்டியில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன

புளோரிடா:

ஜெட் ப்ளூ விமானத்தின் லேண்டிங் கியர் பெட்டியில் இரண்டு பேர் இறந்து கிடந்தனர் என்று அவ்விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானம் தரையிறங்கிய பிறகு வழக்கமான சோதனையின் போது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விமானத்தை அவர்கள் எவ்வாறு ஏறினார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை கண்டிப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியது.

இந்நிலையில் இதுபோன்ற இரண்டாவது சம்பவமாக இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த டிசம்பர் 24 அன்று, சிகாகோவில் இருந்து ஹவாய் தீவுகளில் ஒன்றான மௌய் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் கியர் பெட்டியில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset