நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தண்டனையை ஒத்திவைக்கும் டிரம்பின் மேல்முறையீடு நிராகரிப்பு: நியூ யார்க் நீதிமன்றம் அதிரடி 

வாஷிங்டன்: 

ஆபாச பட நடிகைக்குப் பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் தண்டனை அளிக்கப்படவுள்ள நிலையில் அதனை ஒத்திவைக்க செய்யும் டிரம்பின் மேல்முறையீட்டை நியூ யார்க் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது 

வர்த்தகத்திற்காக போலி ஆவணங்களைத் தயாரித்ததாகவும் இந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல் இருக்க ஆபாச பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்ப்பட்டதாகவும் டிரம்ப் மீது குற்றச்சாட்டு நிரூபணமானது 

இதனால் அவருக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை தண்டனை வழங்கப்படவிருக்கிறது 

இருப்பினும், டொனால்ட் டிரம்ப் வழக்கறிஞர் வாதிட்டதில் இந்த வழக்கு விசாரணையில் வழங்கப்படும் தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். ஆனால் அவரின் வாதத்தை நீதிபதி எல்லென் கெஸ்மெர் நிராகரித்தார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டிரம்ப் எதிர்வரும் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset