செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் இன்று முதல் 11-ஆம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை:
தமிழகத்தில் இன்று முதல் 9-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 10, 11-ம் தேதிகளில் கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளது.
நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 8-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 9-ம் தேதி ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10, 11-ஆம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 11-ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக பனிமூட்டம் காணப்படும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2025, 4:55 pm
மாநில உரிமைகளை பறிக்கும் யுஜிசியின் முடிவு கண்டனத்திற்குரியது: பேராசிரியர் ஜவாஹிருல்லா
January 7, 2025, 2:32 pm
இந்தியாவில் 5 குழந்தைகளுக்கு HMP வைரஸ்: தமிழகத்தில் இருவர் பாதிப்பு
January 6, 2025, 1:14 pm
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியதால் சட்டப் பேரவையிலிருந்து வெளியேறினார் ஆளுநர்
January 3, 2025, 7:48 pm
ஆடுகளை அடைக்கும் மண்டபத்தில் அடைக்கப்பட்ட குஷ்பு, பாஜகவினர்: மதுரையில் பரபரப்பு
January 3, 2025, 3:22 pm
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணியொருவரிடமிருந்து ரூ. 15.12 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
January 1, 2025, 7:54 pm