செய்திகள் தமிழ் தொடர்புகள்
மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத ஆட்சியாளர்களே இறுமாப்புடன் இருக்காதீர்கள்: விஜய் எச்சரிக்கை
சென்னை:
‘சுய நலத்துடன் ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் செய்துவிடுவார்கள்’ என்று, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், நூலை வெளியிட்டு தவெக தலைவர் விஜய் பேசிய தாவது:
இன்றைக்கு அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால், நம் நாட்டின் நிலைமையை நினைத்து பெருமைப்படுவாரா? வருத்தப்படுவாரா? நம் நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல். அது அமைய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில் தான் நியமிக்கப்பட வேண்டும்.
அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்.14-ம் தேதியை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இன்றைக்கு மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் மத்தியில் ஓர் அரசு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. அதேபோல் இங்கே வேங்கை வயலில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இதுவரை அதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.
இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு, மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு அமைந்தாலே போதும். அதனால் தினந்தோறும் நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்வது, அறிக்கை விடுவது, நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என்று காட்டிக்கொள்வது, மழை தண்ணீரில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஆட்சியாளர்கள் இறுமாப்பு: மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான்விடும் எச்சரிக்கை. நீங்கள், உங்கள் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்.
விசிக தலைவர் திருமாவளவனால் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமுடியாமல் போய்விட்டது.
அம்பேத்கரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் அவருக்கு இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. இருந்தாலும் அவர் மனது இன்றைக்கு எங்களோடு தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 6:57 pm
தமிழகத்தில் ஜனவரி 3 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
December 28, 2025, 7:49 am
சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
December 27, 2025, 8:31 am
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி உத்தரவு
December 26, 2025, 4:35 pm
அதிமுகவில் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: எடப்பாடி பழனிசாமி
December 24, 2025, 7:28 am
“விஜய் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை”: பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன்
December 23, 2025, 11:26 pm
எஸ் டி கூரியர் இணை இயக்குனரும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் சகோதரருமான சிராஜூத்தீன் காலமானர்
December 23, 2025, 12:58 pm
சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லை: பயணிகள் கடும் அவதி
December 22, 2025, 2:04 pm
