நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சற்று நேரத்திற்கு முன் சிக்கியது புலி; மக்கள் நிம்மதி பெருமூச்சு  

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் புலி தாக்கி இறந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும் புலி கொன்றது.

பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டது. ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. டி-23 புலி என அடையாளம் காணப்பட்ட அந்த புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த நிலையில், மசினகுடி வனப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட வனத்துறையினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். எனினும் புலி தப்பியோடியது. மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் புலி சோர்வாக காணப்படும் என்பதால் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட வனத்துறையினர் தற்போது புலியை பிடித்துள்ளனர். 

புலிக்கு உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அந்த புலி வண்டலூர் பூங்காவில் விடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புலி கிடைத்த செய்தியறிந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset