நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எக்ஸ் தளத்திலிருந்து விலகிய 200 ஆண்டு பழமையான 'தி கார்டியன்’ நாளிதழ் 

லண்டன்: 

200 ஆண்டுகாலம் பழமையான பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ இனி எக்ஸ் தளத்தில் எதையும் பதிவிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் எக்ஸ் தளத்தின் வாயிலான அதன் தலைமை செயல்முறை அதிகாரி எலான் மக்ஸ் தொடர்ந்து நச்சு கருத்துகளைப் பரப்பி வந்ததே இந்த முடிவுக்கு காரணம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிக முக்கிய சமூக ஊடகமாக இருந்து வந்த ட்விட்டர், எலான் மஸ்க்கின் வருகைக்கு பிறகு எதிர்மறை கருத்துக்கள் அதிகம் புழங்கும் இடமாக மாறியது. அதன் பெயரும் ‘எக்ஸ்’ என்று மாற்றப்பட்டது.

எலான் மஸ்க்கே எக்ஸ் தளத்தின் வழியே தனக்கு வேண்டாதவர்களை மிகவும் கடுமையாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த சூழலில் லண்டனில் பாரம்பரியமிக்க ‘தி கார்டியன்’ நாளிதழ் இனிவரும் காலங்களில் எக்ஸ் தளத்தில் எந்தவொரு பதிவும் பகிரப்படாது என்றும் தங்கள் செய்தியாளர்களின் பயன்பாட்டுக்காக தங்களின் கணக்கு மட்டும் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

’தி கார்டியன்’ நாளிதழுக்கு சொந்தமாக 30க்கு மேற்பட்ட கணக்குகள் உள்ளன. இவற்றை சுமார் 2 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset