
செய்திகள் கலைகள்
ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
சென்னை:
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிரதர்' திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ் . பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஆசிஷ் ஜோசப் கையாள , கலை இயக்கத்தை ஆர் .கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். அக்கா-தம்பி சகோதர பாசத்தை மையப்படுத்தி உணர்வுப்பூர்வமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் இயக்குநர் எம். ராஜேஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, நட்டி என்கிற நட்ராஜ், விடிவி கணேஷ், நடிகை பூமிகா சாவ்லா, ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம், படத்தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப், கலை இயக்குநர் ஆர் .கிஷோர், சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 4:15 pm
தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் கிளிம்ப்ஸ் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்ப்பு
June 11, 2025, 4:36 pm
'கூலி' திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும்': ஆமீர் கான்
June 11, 2025, 3:22 pm
நடிகர் சூர்யாவின் SURIYA 46 படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
June 9, 2025, 5:23 pm
திரைப்படத் தலைப்புகளில் தொலைந்து கொண்டிருக்கும் தமிழ்
June 8, 2025, 1:27 pm
மலேசியாவில் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட விற்பனை: புதிய சாதனை
June 6, 2025, 11:51 am
சூர்யா – வெற்றிமாறன் இணைந்து பணிபுரிய இருந்த ‘வாடிவாசல்’ படம் கைவிடப்படுகிறது?
June 3, 2025, 5:55 pm
கர்நாடகாவில் தக் லைஃப் படம் ஓடாது என்றால் விஜய்யின் ஜனநாயகன் படம் தமிழ்நாட்டில் ஓடாது
June 3, 2025, 5:47 pm
கர்நாடகாவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம் வெளியீடு ஒத்திவைப்பு
June 3, 2025, 4:10 pm
நூற்றுக்கணக்கானோரை வேலையிலிருந்து நீக்கும் Disney
May 31, 2025, 4:28 pm