நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பிளவுவாதிகள், ஊழல் பேர்வழிகள் தான் நமது முதன்மையான அரசியல் எதிரிகள்: அனல் பறந்த தவெக தலைவர் விஜய்யின் உரை 

விழுப்புரம்: 

ஃபாஸிஸம் அரசியல் செய்யும் தரப்பும் ஊழல் பேர்வழிகளுமே தமிழக வெற்றிக் கழகத்தின் முதன்மையான அரசியல் எதிரிகள் என்று தவெக கட்சியின் தலைவர் விஜய் கூறினார். 

நேர்மையான மற்றும் மதசார்பின்மை கொண்ட அரசியலை தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் அடிப்படையில் அனைவருமே பிறப்பால் சமம் என்ற தத்துவத்தை தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுக்கிறது என்று விஜய் அனல் பறக்கும் வகையில் தனது முதல் அரசியல் பேச்சில் குறிப்பிட்டார்.  

பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், மற்றும் அஞ்சலையாம்மாள் ஆகியோர் தவெக கட்சியின் முன்னோடிகள்; கொள்கை தலைவர்கள். அவர்களின் தத்துவங்களை முன்னிருத்தி தவெக தமிழக அரசியலில் களம் காண்பதாக விஜய் குறிப்பிட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset