
செய்திகள் விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி: இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது
துபாய்:
சென்னை அணிக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்தது.
துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் குவாலிபயர் 1 போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
ராபின் உத்தப்பாவும் ருத்ராஜும் அருமையான துவக்கத்தை சென்னை அணிக்கு தந்தார்கள்.
உத்தப்பா 63 ரன்களும் ருத்ராஜ் கெய்க்வாட் 70 ரன்களும் அனாயசமாக அடித்தார்கள்.
சென்னைக்கு, மொயின் அலி 16 முக்கியமான ரன்களை சேர்த்து தந்தார்.
இறுதியில் களமிறங்கிய கேப்டன் தோனி 18 ரன்கள் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சென்னை அணி 6 விக்கெட் இழந்து 173 ரன்களை எடுத்தது.
சென்னை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:01 pm
கேப்டன் கூல் பட்டத்துக்கு டிரேட் மார்க் கோரும் தோனி
July 1, 2025, 8:42 am
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை: ஓலிவர் ஜிராவ்ட்
July 1, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இந்தர்மிலான் அதிர்ச்சி
June 30, 2025, 8:58 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
June 30, 2025, 8:49 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்; காலிறுதியில் பிஎஸ்ஜி, இந்தர்மியாமி தோல்வி
June 29, 2025, 10:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: காலிறுதியில் செல்சி
June 28, 2025, 9:58 am
லெய்செஸ்டர் சிட்டியை விட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் வெளியேறுகிறார்
June 28, 2025, 9:55 am
மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: முதலிடத்தில் நீடிக்கும் மெஸ்ஸி
June 27, 2025, 11:48 am