நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கத்தின் பொன் விழா 

பேங்காக்:

அரை நூற்றாண்டை கடந்தும் சிறப்பாக செயல்பட்டு வரும் தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கத்தின் பொன் விழா அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 

விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்து வருகின்றனர் என்று  தமிழ் முஸ்லிம் சங்கத்தின் தலைவர் வாவு முஹம்மது அலி கூறினார்.

நாளை மாலை 4.30 மணி அளவில் துவங்கும் நிகழ்ச்சியில் தாய்லாந்து இஸ்லாமிய சமய விவிகாரத் தலைவர் ஷைகுல் இஸ்லாம் அல்ஹாஜ் அருன் பூன் சோம் (Al Haji Arun Boonchom) தாய்லாந்துக்கான இந்தியத் தூதர் நாகேஷ் சிங் (Nagesh Singh), தமிழக ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி காஜா மொஹினுத்தீன் பாகவி, இந்திய மேலவை உறுப்பினர் எம். எம். அப்துல்லாஹ், விஜய் தொலைக்காட்சி நீயா நானா புகழ் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர் என்று வாவு முஹம்மது அலி கூறினார்.

 ஜெம்ஸ் டவருக்கு எதிர்புறம் உள்ள அசம்ப்ஷன் கல்லூரி மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த விழா இரவு விருந்துடன் நிறைவடையும் என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது. 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset