நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும்: எலோன் மஸ்க்

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்காளர்கள் ஒரு மில்லியன் டாலர் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாக செல்வந்தர் Elon Musk அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு அவர் ஒரு மில்லியன் டாலர் தரவிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அதற்குத் தகுதிபெற அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் முதல் 2 சட்டத் திருத்தகங்களுக்கு வாக்காளர்கள் தங்கள் ஆதரவைப் பதிவுசெய்யவேண்டும்.

அந்த 2 சட்டத் திருத்தங்களில் ஒன்று பேச்சுரிமை மற்றொன்று ஆயுதங்களை வைத்திருக்க அனுமதி வழங்குவது.

இருப்பினும், வாக்குகளைப் பெறுவதற்காக மக்களுக்குப் பணம் கொடுப்பது சட்டபடி குற்றம்.

பென்சில்வேனியா ஆளுநர் மஸ்கின் மில்லியன் டாலர் வாக்குறுதியை விசாரிக்கும்படி அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset