நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்

புது டெல்லி: 

கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவுக்கு தர்மேந்திர பிரதான் 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பின்போது, தொழில்நுட்பம், புத்தாக்க நிறுவனங்கள், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய துறைகளில் சிங்கப்பூரை நம்பகமான நட்பு நாடாக இந்தியா கருதுவதாக பிரதான் கூறினார்.

திறன், வளம் மற்றும் சந்தை ஆகிய மூன்று முக்கிய தூண்களை மையமாகக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை அமைந்தது என்று பிரதான் பின்னர் தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset