நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொலி வைரல் 

சீனா: 

புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொளி இணையத்தில் பெறும் விமர்சனங்களை ஆளாகியுள்ளது.

Zeekr Intelligent Technology நிறுவனத்தின் புதிய மின் கார்களில் hotpot  வைத்துச் சுயமாக சமைக்கும் வசதியுள்ளது. 

காரில் உள்ள முன்னிருக்கைகளைப் பின்பக்கம் திருப்பி பின்னால் அமர்ந்திருப்போரைப் பார்த்துச் சாப்பிடலாம்.

காரில் அவ்வளவு இடம் இருப்பது குறித்து காணொளியில்  யாங் என்பவர் சுட்டினார்.

ஆனால் இணையவாசிகளுக்கு இது நல்ல யோசனையாகத் தோன்றவில்லை. 

சொந்தக் காரில் யாராவது சொந்தமாகச் சமைத்துச் சாப்பிடுவார்களா? அதனால் வரும் வாடையையும் எண்ணெய்க் கறைகளையும் எப்படி அகற்றுவது? என்று இணையவாசி கருத்து பதிவிட்டுள்ளார். 

இதனிடையே காரை வெவ்வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு கார் வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காண்பிக்க அந்தக் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதாக யாங் விளக்கினார்.

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset