நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உணவுக்குப் பதில் பற்பசை வாங்கிய ஊழியர்களை மெட்டா வேலை நீக்கம் செய்தது

நியூ யார்க்:

பற்பசை, சலவை தூள் ஆகிய பொருள்களை வாங்கிய ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

அந்தப் பற்றுச்சீட்டை மற்றவர்களுடன் பகிர்வது, வரம்பை மீறி செலவு செய்வது ஆகிய விதிமீறல்களையும் சிலர் ஈடுபட்டதாக மெட்டா நிறுவன ஊழியர்கள் கூறினர்.

வேலையைவிட்டு நீக்குவதற்கு முன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

மெட்டா ஊழியர்களுக்கு மதிய வேளை உணவிற்கு 25 டாலரும் காலை வேளை உணவிற்கு 20 டாலரும் இரவு வேளை உணவிற்கு 25 டாலரும் பற்றுச்சீட்டாக வழங்குகிறது.

Grubhub எனும் தளத்தில் அதைக் கொண்டு உணவு வாங்கலாம்.

அந்தப் பற்றுச்சீட்டைக் கொண்டு உணவு அல்லாத மற்ற பொருள்களை வாங்கிய அல்லது வரம்பை மீறி செலவு செய்த சுமார் 30 ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset