நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நிலாவில் கால்பதிக்கும் Prada ஆடைகள்

வாஷிங்டன்:

2026-ஆம் ஆண்டு NASA முதன்முறையாக நிலவின் தென்கோடிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பவிருக்கிறது.

மிதமிஞ்சிய குளிரைக் கொண்ட அந்தப் பகுதியில் நீர் நிறைந்த பள்ளங்களைக் கண்டுபிடிப்பது பயணத்தின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

இந்தப் பயணத்தில் பங்கேற்கும் வீரர்களின் ஆடைகளைப் பிரபல இத்தாலிய நிறுவனமான பிராடா (Prada) ஒன்றுசேர்ந்து வடிவமைத்துள்ளது.

விண்வெளியின் கடும் தட்பவெப்பச் சூழலை எதிர்கொள்ளும் தன்மையுடன் ஆடைகள் இருப்பது அவசியம் என வடிவமைப்பாளர்கள் கூறினர்.

விண்வெளி வீரர்கள் 8 மணிநேரம் வரை நிலவில் நடக்கவேண்டியிருக்கும். எனவே, ஆடைகளில் கதிரியக்கப் பாதுகாப்பு, போதிய பிராணவாயு இருப்பு போன்ற முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பொறியியல், அறிவியல், கலை ஆகியவற்றைப் பயன்படுத்தி எதிர்கால விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக, சௌகரியமாகப் பணியாற்ற உதவும் சிறந்த ஆடைகளை உருவாக்கியுள்ளதாய் வடிவமைப்பாளர்கள் பெருமிதத்தோடு கூறினர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset