நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

130,000 ரிங்கிட் மதிப்புள்ள 26 மாடுகளைக் கடத்த முயன்ற நடவடிக்கை முறியடிப்பு

தானா மேரா: 

நேற்று அதிகாலை தாய்லாந்திலிருந்து கப்போங் நிபோங்கிலுள்ள கோலோக் ஆற்றின் வழியாக 26 மாடுகளைக் கடத்த முயன்ற நடவடிக்கையை அரச மலேசிய இராணுவப் படை முறியடித்தது. 

கடத்த முயன்ற 26 மாடுகளின் மதிப்பு  130,000 வெள்ளியாகும். 

நேற்று அதிகாலை 1.15 மணியளவில் மலேசிய காலாட்படையின் எட்டாவது படைப்பிரிவின் பகுதியில் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டதை மலேசிய இராணுவப் படையின் இரண்டாம் பிரிவின் தலைமையகம் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது. 

அங்குப் பணியிலிருந்த இராணுவ வீரர்கள் கோலோக் ஆற்றைக் கடந்து அண்டை நாடுகளிலிருந்து மாடுகளைக் கொண்டு வருவதைக்  கண்டறிந்தனர்.

சந்தேக நபரைத் தாக்குவதற்கு முன்பு அவர்கள் கடத்தல்காரர்களின் அனைத்து நகர்வுகளையும் கண்காணித்தனர்.

ஆனால் சந்தேக நபர் தாய்லாந்து எல்லைக்கு தப்பிச் சென்றார்.

சந்தேக நபர் 130,000 ரிங்கிட் மதிப்புள்ள 26 மாடுகளை விட்டுச் சென்றுள்ளார். 

இது குறித்து கப்போங் நிபோங் காவல் நிலையத்தில் போலீஸ் புகார்  செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை மலேசியாவின் தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறை (MAQIS)-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

அதே நேரத்தில் இந்தக் கடத்தல் வழக்கை அரச மலேசிய சுங்கத் துறை விசாரிக்கும் என்று அவர் கூறினார்.

- கௌசல்யா & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset