நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: வரும் 27-ஆம் தேதி தேர்தல்

டோக்கியோ:

ஜப்பான் பிரதமராக பதவி வகித்து வந்த புமியோ கிஷிடா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதனால் அவர் சமீபத்தில் ராஜினாமா செய்தார். புமியோ கிஷிடா 2021-ல் பிரதமராக பொறுப்பேற்று, 3 ஆண்டுகளே பதவியில் இருந்தார்.

இதையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டது. பிரதமர் பதவிக்கு, அதாவது கட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டனர்.

இதற்கான வாக்கெடுப்பு கடந்த 1-ஆம் தேதி நடந்தது. இதில் ஷிகெரு இஷிபா (67) வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், ஜப்பான் நாடாளுமன்றத்தைக் கலைக்கப் பிரதமர் ஷிகெரு இஷிபா உத்தரவிட்டார்.

திட்டமிட்டபடி வரும் 27-ஆம் தேதி தேர்தலை நடத்த தயாராகி வருகிறார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரை பதவியில் இஷிபாவும், அவரது அமைச்சரவையும் பதவியில் நீடிப்பார்கள்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset