நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாலத்தீவுக்கு இந்திய சுற்றுலா பயணிகள் வர அதிபர் அழைப்பு

புது டெல்லி:

மாலத்தீவுக்கு அதிகமான இந்திய சுற்றுலா பயணிகள் வரவேண்டும் என்று அந்நாட்டு அதிபர் முஹம்மது முயிஸ் அழைப்பு விடுத்தார்.

இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு நல்லுறவு குறித்து பேசினார். அப்போது 400 மில்லியன் டாலர் கடனுதவியை மோடி அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாலத்தீவு அதிபர் . இந்தியா - மாலத்தீவு உறவு நூற்றாண்டுகள் பழமையானது.

சுற்றுலா, மருத்துவம், கல்வி மற்றும் பிற காரணங்களுக்காக ஏராளமான மாலத்தீவு மக்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.  மாலத்தீவின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான இந்திய சுற்றுலா பயணிகள் எங்கள் நாட்டுக்கு வருகை தருகின்றனர்.

எங்களின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலா துறையில் இந்திய பயணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மாலத்தீவுக்கு மேலும் கூடுதல் இந்திய பயணிகளை வரவேற்க காத்திருக்கிறோம் என்றார்.

மாலத்தீவில் ரூபே அட்டை வாயிலான பரிவர்த்தனை சேவை மற்றும் ஹனிமாதூ விமான நிலையத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான ஓடுதளம் ஆகியவற்றை பிரதமர் மோடியும் அதிபர் முஹம்மது முயிஸும் கூட்டாக தொடங்கிவைத்தனர். மேலும், 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset