நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானத்தில் ஒளிபரப்பான ஆபாச படம்: பயணிகள் அதிர்ச்சி

கான்பெரா:

ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் ஹனேடா நகருக்கு கியூ.எப்-59 என்ற விமானம் புறப்பட்டது.

Qantas ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில் தங்களது இருக்கை முன்பு உள்ள குட்டித்திரையில் பயணிகள் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அங்குள்ள அனைத்துத் திரைகளிலும் ஒரே நேரத்தில் ஆபாச படம் ஒளிபரப்பானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அதனை மாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் வேறு படத்திற்கு மாற்ற முடியவில்லை.

இந்தச் சம்பவத்தால் குடும்பத்துடன் சென்றிருந்த பயணிகள் மிகவும் தர்ம சங்கடத்துக்குள்ளாகினர்.

இதுகுறித்து நடத்திய விசாரணையில் தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

எனினும் இந்தத் தவறுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கோருவதாக Qantas flight ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset