நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் சையத் அல்வி சாலையில் இரு கடைவீடுகள் இடிந்து விழுந்தன: 6 பேர் காயம்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் பிரபலமான சையத் அல்வி ரோட்டில் (Syed Alwi Road) உள்ள எண் 84, 85 ஆகிய இரு மாடிக் கடைவீடுகளின் ஒரு பகுதி இடிந்து திடீரென்று விழுந்துள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் அந்தச் சம்பவம் குறித்து தகவல் பெற்றதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கின்றனரா என்பதை அறியத் தேடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அது கூறியது.

எண் 84 கடைவீட்டின் இரண்டாம் தளத்திலிருந்து ஒருவர் மீட்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.

படிக்கட்டு அடைக்கப்பட்டிருந்ததால் அவரால் வெளியேற முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிபாடுகளில் யாரும் சிக்கி இருக்கவில்லை.

6 பேருக்குச் சிறுகாயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset