செய்திகள் உலகம்
"பி ஹாப்பி, நன்றாக சாப்பிடுங்கள்” – திருடப் போன வீட்டில் கடிதம் எழுதி வைத்துச் சென்ற திருடன்
பிரிட்டன்:
திருடப் போன வீட்டில் கூட்டிப் பெருக்கி, சாப்பாடு சமைத்து, துணி துவைத்து காயப்போட்டுத் தப்பிய திருடன் பற்றிய உண்மை வெளிவந்துள்ளது.
பிரிட்டனில் கார்டிப் நகரில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டில் திருடுவதற்காக டாமியன் வோஜ்னிலோவிச் என்ற திருடன் உள்ளே நுழைந்துள்ளான்.
இந்நிலையில், பெண் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து நுழைந்த டாமியன், வீட்டில் சேர்ந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, சமையலறை, கழிவறையில் உள்ள பொருட்களைச் சீராக அடுக்கி வைத்து, கடையில் வாங்கி வைத்திருந்த பலசரக்கு பொருட்களைக் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டைத் துடைத்து, சமையல் செய்து, துணிகளைத் துவைத்து அதைக் காயப்போட்டு விட்டுச் சென்றுள்ளார்.
வீட்டை விட்டு வரும்போது, ‘டோன்ட் வொரி, பி ஹாப்பி, நன்றாக சாப்பிடுங்கள்’ என்று எழுதி வைத்துவிட்டும் வந்துள்ளார்.
வீட்டில் வசித்து வந்த அந்தப்பெண் திரும்பி வைத்தும் இதைப் பார்த்து அதிர்ந்துபோனார்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தபின், திருடனின் வினோத செய்கையால் பயந்து தனது வீட்டில் வசிக்காமல் தோழி வீட்டில் தங்கியுள்ளார்.
டாமியன் வோஜ்னிலோவிச் மற்றொரு வீட்டில் திருடும்போது டாமியன் பிடிபட்டுள்ளார். இதுதொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:10 pm
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்
October 22, 2024, 8:31 pm
இலங்கையில் புதிய வர்ணங்களில் கடவுச் சீட்டு
October 22, 2024, 3:00 pm
புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொலி வைரல்
October 22, 2024, 2:59 pm
நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
October 22, 2024, 2:57 pm
38 நாய்களுடன் நடைபயிற்சி: மிட்செல் ரூடி கின்னஸ் சாதனை
October 22, 2024, 2:56 pm
ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும்: எலோன் மஸ்க்
October 22, 2024, 10:11 am
வியட்நாமின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங் தேர்வு செய்யப்பட்டார்
October 22, 2024, 7:11 am
இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு: 109 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார்
October 19, 2024, 10:13 pm
மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவரிடம் 10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள்: ஒருவர் கைது
October 19, 2024, 9:04 pm