நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தரையிறங்கிய போது விமானத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

லாஸ் வேகாஸ்:

லாஸ் வேகாஸ் ஹாரி ரெயிட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய விமானத்தில் தரையிறங்கும் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ321-200 ரக விமானம் 1326 சான்தியாகோவில் இருந்து லாஸ் வேகாஸ் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. 

திடீரென விமானிகளில் ஒருவர் விமானத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை கவனித்தார். பின்னர், அவசர நிலையை அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, அவசரமாக விமானம் தரையிறங்கியது. ஓடுபாதையில் தரையிறங்கிய விமானத்தில் தீடீரென தீப்பிடித்தது. 

இதற்கிடையே, விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டனர். 

விமானத்தில் தீ அணைக்கப்பட்ட நிலையில், அனைத்துப் பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset