நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்

ஜெருசலம்: 

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

ஹிஸ்புல்லாவும் அதை உறுதிப்படுத்தியது.

லெபனான் தலைநகர் பெய்ருட் மீது வெள்ளிக்கிழமையன்று தாங்கள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டது.

ஹசன் நஸ்ரல்லா மாண்டுவிட்டார், என்ற பொருள் தரும் ஆங்கில வார்த்தைகளை இஸ்ரேல் ராணுவத்தின் பேச்சாளரான லெஃப்டினண்ட் கர்னல் நடாவ் ‌ஷொ‌ஷானி 
எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார். 

மற்றொரு ராணுவப் பேச்சாளரான கேப்டன் டேவிட் அவ்ரஹாம், நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.

இதற்கு முன்பு 2006ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே நடந்த போரில் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக வதந்திகள் எழுந்தன.

ஆனால் எவ்விதப் பாதிப்புமின்றி நஸ்ரல்லா உயிருடன் இருப்பது பின்னர் தெரியவந்தது என்று அவர் சொன்னார்.

தாங்கள் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் பல்வேறு தளபதிகள் மாண்டுவிட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset