நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்தின் 11 மாநிலங்களில் வெள்ள அபாயம்

பேங்காக்: 

தாய்லாந்தின் சாவ் ஃபிராயா பேசின் பகுதியில் அமைந்துள்ள 11 மாநிலங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் அடங்கும்.

சாய் நாட் மாநிலத்தில் உள்ள சாவ் ஃபிராயா அணைக்கட்டிலிருந்து வெளிவரும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உத்தாய் தானி, சாய் நாட், சிங் புரி, ஆங் தோங், சுஃபான்புரி, லொப்புரி, பேங்காக் உள்ளிட்ட பகுதிகளில் சாவ் ஃபிராயா ஆற்றுக்கு அருகே வசிக்கும் சமூகங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவ் ஃபிராயா அணைக்கட்டிலிருந்து வெளியாகும் நீரின் அளவை படிப்படியாக அதிகரிக்கப்போவதாகத் தாய்லாந்தின் தேசிய நீர்பாசனப் பிரிவு வியாழக்கிழமையன்று தெரிவித்தது. 

தொடரும் கனமழை, அந்நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஒரு காரணம்.

சாவ் ஃபிராயா அணைக்கட்டிலிருந்து தற்போது வினாடிக்கு 1,498 கியூபிக் மீட்டர் அளவு நீர் வெளியிடப்படுகிறது.

அது, வினாடிக்கு 2,000 கியூபிக் மீட்டர் அளவைத் தாண்டாமல் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தேசிய நீர்பாசனப் பிரிவு குறிப்பிட்டது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset