நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தினுள் சுற்றுப்பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

சிங்கப்பூர்:

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம் அதன் இரண்டு UTown உணவு நிலையங்களையும் shuttle பேருந்துச் சேவையையும் பயன்படுத்தக்கூடியவர்களைக் கட்டுப்படுத்துகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் அதிக சுற்றுப்பயணிகளை எதிர்பார்ப்பதால் அத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேசியப் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே shuttle பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

அக்டோபர் 6ஆம் தேதி மட்டும் அந்தத் தடை பொருந்தாது என்று பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை Fine Food and Flavours உணவு நிலையங்களுக்குத் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டும் செல்லலாம்.

அக்டோபர் 5, 6ஆம் தேதிகளில் அந்தத் தடை பொருந்தாது.

பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைக் காட்டிய பிறகே மாணவர்களும் ஊழியர்களும் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

பல்கலைக்கழகத்தின் மத்திய நூலகமும் அந்தக் காலக்கட்டத்தின்போது மூடப்படும்.

அக்டோபர் முதல் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை சீனாவில் விடுமுறைக் காலம் என்பதால் பலர் வெளிநாட்டு விடுமுறைகளுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset