நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் ஜூரோங் ஈஸ்ட், புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையே மூன்றாவது நாளாக MRT போக்குவரத்து தடங்கல் தொடர்கிறது 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் MRT போக்குவரத்துத் தடங்கல் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

கிழக்கு-மேற்குத் தடத்தில் ஜூரோங் ஈஸ்ட், புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையில் ரயில் சேவை இருக்காது.

வரும் திங்கட்கிழமைக்குள் (30 செப்டம்பர்) ரயில் சேவையை முழுமையாக வழக்கநிலைக்குக் கொண்டுவர SMRT அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

சேவைத் தடையால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவசப் பேருந்துச் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

பூன் லே - ஜூரோங் ஈஸ்ட் நிலையங்களுக்கு இடையிலும் புவன விஸ்தா-குவீன்ஸ்டவுன் நிலையங்களுக்கு இடையிலும் 10 நிமிட இடைவெளியில் ரயில் சேவகைள் வழங்கப்படும்.

முன்னதாக சேவையின் ஒரு பகுதியை வழக்கநிலைக்குக் கொண்டுவரும் திட்டத்தை அதிகாரிகள் கைவிட்டனர்.

ஜூரோங் ஈஸ்ட் - புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையில் இணைப்பு ரயில் சேவையை வழங்குவது பற்றி முன்பு பரிசீலிக்கப்பட்டது.

ஆனால் அவ்வாறு செய்வது சேவையை முழுமையாக வழக்கநிலைக்குக் கொண்டுவருவதை மேலும் சில நாள்களுக்குத் தாமதமாக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

அண்மைச் சேவைத் தடங்கல் புதன்கிழமை (25 செப்டம்பர்) காலையில் கிளிமெண்டி நிலையத்திற்கு அருகே கிழக்கு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று பழுதடைந்ததால் உண்டானது.

அதனால் தண்டவாளத்திலும் அதனையொட்டிய சாதனங்களிலும் கடும் சேதம் ஏற்பட்டதைப் பொறியியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

தற்போதைய பழுதுபார்ப்புப் பணிகள் 30க்கும் மேற்பட்ட தண்டவாளப் பகுதிகளை மாற்றுவதிலும் மின்-வடங்களைப் பொருத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன.

மாற்றப்படும் தண்டவாளப் பகுதி ஒவ்வொன்றின் எடையும் சுமார் ஒரு டன் இருக்கும்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset