நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து சிக்கலில் சிக்கிய கங்கனா ரணாவத் மீண்டும் மன்னிப்பு கோரினார்

சிம்லா:

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் திரும்ப கொண்டு வர வேண்டும் என்று பேசியதற்கு அவர் சார்ந்த பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகை கங்கனா ரணாவத் மீண்டும் மன்னிப்பு கோரினார்.

2021ம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து அச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.

இந்நிலையில்,  கங்கனா ரணாவத்  நிகழ்ச்சியில் பேசுகையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சில மாநிலங்களில் மட்டுமே போராட்டம் நடந்தது. விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு வேளாண் சட்டங்களைத் திரும்ப கொண்டுவர வேண்டும் என்றார்.

இது அடுத்த மாதம் நடைபெறும் ஹரியாணா பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், கங்கனாவுக்கு கட்சிக் கொள்கை விவகாரங்களில் கருத்து தெரிவிக்க  உரிமையில்லை என்றும் இதுபோன்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என்றும் பாஜக எச்சரித்தது. 

இதையடுத்து, தான் தெரிவித்த கருத்துக்கு கங்கனா மன்னிப்பு கோரி விடியோ வெளியிட்டுள்ளார்.

முன்பும் இதேபோல் விவசாயிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக கங்கனா மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset