நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை புதிய பிரதமர் Dr.ஹரிணி அமரசூரிய: பின்னணி என்ன?

கொழும்பு:

இலங்கையின் புதிய பிரதமர் Dr. ஹரிணி அமரசூரிய. இவரது பின்னணி என்ன?  

 54 வயதான ஹரிணி (பிறப்பு 6 மார்ச் 1970)  இலங்கையின் சிறந்த கல்வியாளர்,  பல்கலைக்கழக விரிவுரையாளர், சமூக செயற்பாட்டாளர், அரசியல்வாதி ஆவார்.

அவர் தற்போது 2024 முதல் இலங்கையின் 16வது பிரதமராக ஜனாதிபதிஅநுர குமார திஸாநாயக்கவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான அவர், தற்போது வெளிவிவகார அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும், 2024 முதல் தொடர்புத்துறை ஊடக அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். 

அமரசூரிய 2020 முதல் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 

அவர் சமூகத் துறையில்  விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். 

இளைஞர்களின் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, குழந்தைகள் பாதுகாப்பு, இலங்கை கல்வி முறையின் திறமையின்மை போன்ற அழுத்தமான பிரச்சினைகள் குறித்த தனது ஆராய்ச்சிகளுக்காக ஹரிணி நன்கு அறியப்பட்டவர்.

அவர் தற்போது நெஸ்ட் எனப்படும் இலங்கை அரச சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். 

சிறிமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரதுங்கவுக்குப் பிறகு இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset