நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மருத்துவ விடுப்பை ஏற்க மறுத்த முதலாளி: தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு 

பெங்கொக்: 

கூடுதல் மருத்துவ விடுப்பை ஏற்க மறுத்த நிர்வாகத்தின் செயலினால் மன உளைச்சலுக்கு ஆளான தொழிலாளி ஒருவர் வேலையிடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

தாய்லாந்து நாட்டின் சமுட் ப்ராகான் மாவட்டத்தைச் சேர்ந்த மே என்ற பெண்மணி ஒருவர் மின்சார உற்பத்தி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். 

மருத்துவ விடுப்பு தொடர்பாக கூடுதல் விடுமுறை கோரிய நிலையில் அதனை நிர்வாகம் ஏற்க மறுத்தது. இதனால் அம்மாது மயங்கி விழுந்து பிறகு உயிரிழந்ததாக அவரின் சக தொழிலாளி முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு எதிராக சமூக ஊடகங்களில் கண்டனங்கள் வலுவாக எழுந்தன. மருத்துவ விடுப்பு வழங்கியும் அவரின் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை. 

இதனால் உடல்நலமில்லாத நிலையில் அவர் வேலை செய்துள்ளார். 20 நிமிடங்கள் வரை வேலை செய்த அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், அவர் துரதஷ்டவசமாக மரணமடைந்தார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset