நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சாய்ந்த இருக்கையால் மூண்ட சண்டையால் தம்பதியைத் தடை செய்த Cathay Pacific விமான நிறுவனம்

விக்டோரியா: 

ஹாங்காங்கைச் சேர்ந்த தம்பதி தனது விமானங்களில் பயணம் செய்வதை Cathay Pacific விமான நிறுவனம் தடை செய்துள்ளது.

இம்மாதம் (செப்டம்பர்) 17ஆம் தேதி ஹாங்காங்கிலிருந்து லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் சம்பவம் ஏற்பட்டது.

சாய்ந்த இருக்கை காரணமாக அந்தத் தம்பதி, சீனப் பெண்ணுடன் சண்டையிட்டதால் நிறுவனம் அந்த முடிவை எடுத்தது.

சீனப்பெண் இருக்கையைச் சாய்த்த பிறகு தம்பதி அவரைத் தொந்தரவு செய்ததாக அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

மேலும், அவரிடம் தகாத செய்கையையும் அவர் காட்டுவது காணொளியில் தெரிகிறது.

கணவர் பெண்ணின் இருக்கையைப் பலவந்தமாகத் தள்ளினார்.

பெண் விமானச் சிப்பந்தியிடம் சம்பவத்தைப் பற்றி சொன்னபோது அவர் பெண்ணிடம் இருக்கையில் நேராக அமரச் சொன்னார். பெண் அவ்வாறு செய்ய மறுத்தார்.

தமது பயணிகளை அவமதிப்பவர்களைச் சகித்துக்கொள்ள முடியாது என்று Cathay Pacific நிறுவனம் கூறியது.

Xiaohongshu சமூக ஊடகத் தளத்தில் பெண் அது குறித்துப் பதிவிட்டதாக BBC தெரிவித்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset