நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீக்கிய குழுவினரை சந்தித்த வெள்ளை மாளிகை அதிகாரிகள்

வாஷிங்டன்:

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்துக்கு முன்பாக, காலிஸ்தான் ஆதரவு சீக்கிய குழுவினரை வெள்ளை மாளிகை அதிகாரிகள் சந்தித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நடந்த சதி நடப்பதாக அவர் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் 21 நாள்களுக்குள் பதிலளிக்கக் கோரி, மத்திய அரசுக்கு அமெரிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்தச் சூழலில், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை  சென்றார். அதிபர் பைடனுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது உக்ரைன் ரஷியா போர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால், பிரதமர் மோடி வருகைக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவு சீக்கிய சமூக செயல்பாட்டாளர்கள் குழுவை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் பேசியுள்ளனர்.

அமெரிக்காவில் சீக்கியர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் நடவடிக்கைகள் அவசியமாகின்றன. சீக்கியர்களுக்கு நீதியும் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க சீக்கிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

சீக்கிய பிரிவினைவாதிகளை தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset