நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தோல்வியுற்றால் இதுவே என்னுடைய கடைசி தேர்தல்: டொனால்ட் டிரம்ப் 

வாஷிங்டன்:

இவ்வாண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடக்கவுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணையதிபர் கமலா ஹாரிஸும் குடியரசுக் கட்சியின் சார்பில் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

வரும் தேர்தலில் தோல்வி கண்டால் 2028-ஆம் ஆண்டில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவீர்களா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு வாய்ப்பு இல்லை என்று டிரம்ப் சொன்னார்.

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset