நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை சரிவு: உள்துறை அமைச்சு

சிங்கப்பூர்:

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை 853. அவர்களில் 76 விழுக்காட்டினருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு கூறியது. 

கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழும் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் வாழும் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை 1,411.

இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி 1,109ஆகக் குறைந்தது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை 853.

அவர்களில் 76 விழுக்காட்டினருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு கூறியது.

இதன் மூலம் சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு, கல்வி ஆகியவற்றில் வழங்கப்படும் மானியங்களை அவர்கள் பயன்படுத்தி பலனடையலாம்.

குடியுரிமை இல்லாதோரில் கிட்டத்தட்ட 24 விழுக்காட்டினருக்கு குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் சிறப்பு அட்டையை வழங்கியுள்ளது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset