நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானத்தின் முன்புறக் கண்ணாடியை சுத்தம் செய்யும் பைலட் 

இஸ்லாமாபாத்:  

பாகிஸ்தானில் விமானம் புறப்படுவதற்கு முன்னர் விமானத்தின் சன்னல்களை விமானி துடைக்கும் காட்சியைக் காட்டும் காணொலி இணையத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.

பாகிஸ்தானிலிருந்து சவுதி அரேபியாவுக்குச் செல்லும் Serene Air விமானத்தில் சம்பவம் நடந்தது.

விமானி விமானத்தின் ஓரத்தில் இருக்கும் சன்னலிலிருந்து எட்டிப் பார்த்து சன்னலைச் சுத்தம் செய்வது குறித்து இணையவாசிகள் இடையே பல கருத்துகள் எழுந்தன.

இது விமானியின் வேலையா? இவர் விமானியா பேருந்து நடத்துநரா? விமானத்துறையின் மற்ற ஊழியர்களின் வேலைதானே இது? என்று பல கேள்விகள்...

விமானிகளும் சுத்தம் செய்வார்கள் என்று கூறும் கருத்துகளும் இருந்தன.

சில விமானிகளுக்குச் சன்னல்களிலிருந்து வெளியே தெளிவாகத் தெரியவில்லையென்றால் சன்னல்களை அவர்களே சுத்தம் செய்வதுண்டு என்று ஒருவர் பதிவிட்டார்.

ஆதாரம்: Daily Express Urdu

தொடர்புடைய செய்திகள்

+ - reset