நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்தது: 62 பேர் பலி

சாவ் பாவ்லோ:

பிரேசிலில் 62 பேருடன் சென்ற பயணிகள் விமானம் குடியிருப்பு பகுதியில் வீட்டின் மீது விழுந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசில் நாட்டின் வியோபாஸ் 2283 என்ற பயணிகள் விமானம் 62 பேருடன் பிரேசிலியன் நகரின் வின்ஹிதோவின் கேஸ்கேவலிருந்து புறப்பட்டு சென்றது. 

சாபோலோ நகரில் நடுவானில் திடீரென ஒரே இடத்தில் வட்டமடித்துக்கொண்டே குடியிருப்பு பகுதியில் ஒருவீட்டின் மீது விழுந்து நொறுங்கியதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. 

விமானத்தில் பயணித்த 62 பேரும் பலியாயினர்.

இந்நிலையில் வியோ பாஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 58 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 4 பணியாளர்களுடன் சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான குருல்ஹாஸ் நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக உறுதிப்படுத்தியுள்ளது. 

விபத்துக்கான காரணம் என்ன என்று அறிக்கையில் கூறவில்லை..விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அது கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset