நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வங்காளதேச இடைக்கால அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கிறோம்: அமெரிக்கா தகவல் 

வாஷிங்டன்: 

வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து நாட்டை விட்டு தப்பியோடி இந்தியாவில் தஞ்சமடைந்தார். 

இந்நிலையில், வங்காளதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தற்போது இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

வங்காளதேசத்தில் இடைக்கால அரசுடன்  தொடர்பில் இருந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

வங்காளதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். அவரின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டதாக அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறினார். 

வங்காளதேச மக்களுக்கு ஜனநாயகமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற இடைக்கால அரசிடம் அமெரிக்கா வலியுறுத்துகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset