நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தலையில் பேன்கள் நடமாடுகின்றன: உடனே விமானத்தை தரை இறக்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 

நியூயார்க்:

அமெரிக்காவில் நியூயார்க் நகரத்துக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

American Airlines விமானத்தில் இருந்த பயணி சகப் பயணியின் தலையில் பேன் இருப்பதைக் கண்டதாகவும் அதற்காக விமானம் ஃபீனிக்ஸ் (Phoenix) நகரில் தரையிறக்கப்பட்டதாகவும் ஒருவர் Tiktok தளத்தில் கூறினார்.

காணொலியைப் பதிவேற்றம் செய்த ethanforyou எனும் பயனீட்டாளர், விமானத்தில் தாமும் இருந்ததாகக் கூறினார்.

"நான் எங்கும் சுற்றிப் பார்த்தேன்...எதுவும் நடக்கவில்லை...யாரும் பதறவில்லை...விமானம் தரையிறங்கியதும் ஒரு பெண் விரைந்து வெளியேறினார்" என்று அவர் கூறினார்.

விமானம் ஏன் தரையிறக்கப்பட்டது என்று சிப்பந்திகள் விளக்கவில்லை என்று ethanforyou சொன்னார்.

சகப் பயணிகளின் உரையாடல்களின்படி ஒருவரின் தலையில் பேன்கள் காணப்பட்டன...சகப் பயணிகள் விமானச் சிப்பந்திகளிடம் புகார் அளித்ததாக ethanforyou அறிந்தார்.

விமானம் தரையிறக்கப்பட்டதுடன் அதன் பயணத்தை  12 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Tiktok காணொலியைக் கண்ட இணையவாசிகள் பலரால் அதை நம்பமுடியவில்லை.

"விமானம் தரை இறக்க பேன் ஒரு காரணமா? அதை ஒரு அவசர  நெருக்கடியாக எண்ண முடியுமா?"

"பள்ளியில் அப்படி நடந்தால்கூட மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவதில்லை" என்று சிலர் கூறினர்.

சிலரோ இனி விமானத்தில் ஏறவே அஞ்சுவதாகக் கூறினர்.

'நான் பயணத்தை ரத்துச் செய்துவிடுவேன்"

'விமானத்தில் மீண்டும் ஏறப்போவதில்லை'

என்று சிலர் தெரிவித்தனர்.

மருத்துவ அவசரத்தால் விமானத்தைத் தரையிறக்கியதாக American Airlines பின்னர் உறுதிசெய்தது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset