நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இங்கிலாந்தில் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள்  மோசமாகி வருகின்றன

லண்டன்:

இங்கிலாந்தில் இஸ்லாமியர், புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கு எதிராக வலதுசாரிகள் நடத்திவரும் போராட்டங்களைத் தொடந்து அங்கு வன்முறை வெடித்திருக்கிறது.

பிரிட்டனில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டம் வன்முறையாகவும் மாறியிருக்கிறது.

பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற யோகா, நடனப் பயிலரங்கில் கலந்துகொண்ட மூன்று சிறுமிகள் கடந்த ஜூலை 29ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். 

அந்த கொலைவெறித் தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக, வேல்ஸை சேர்ந்த 17 வயதான ஆக்செல் ருடகுபனா என்பவர் கைது செய்யப்பட்டதாக இங்கிலாந்து போலிசார் தெரிவித்தனர்.

ஆனால், தாக்குதல் நடத்தியவர் 2023-ம் ஆண்டு படகு மூலமாக பிரிட்டனுக்கு வந்த அகதி என்றும், அவர் ஒரு இஸ்லாமியர் என்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. 

அதைத் தொடர்ந்து, தீவிர வலதுசாரிகளான இங்கிலீஷ் டிஃபன்ஸ் லீக் என்ற அமைப்பினர் போராட்டத்தில் இறங்கினர்.

இஸ்லாமியர்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிராக தொடங்கப்பட்ட அந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.

இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களிலும், வடக்கு அயர்லாந்திலும் இஸ்லாமியர்களையும், மசூதிகளையும் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெறுகின்றன. காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடைபெறுகிறது. 

இதனால், சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தவர்கள் அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். 

கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தின் சௌத்போர்ட் மசூதிக்கு வெளியில் நடைபெற்ற மோதலைத் தடுக்கச் சென்ற போலீஸார் மீது கற்களையும், பாட்டில்களையும் கொண்டு போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். 

அதில், 50க்கும் மேற்பட்டோர் காயடைந்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset