நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சுக்மா விளையாட்டுப் போட்டியில் பேரா 35 தங்கப்பதக்கங்களை வெல்லும்: பேராக் மந்திரி புசார்

ஈப்போ:

சரவாக்கில் நடைபெறவிருக்கும்  21ஆவது சுக்மா விளையாட்டுப் போட்டியில் குறைந்தது 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பேரா இலக்கு வைத்துள்ளது என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சராணி முஹம்மத் கூறினார்

ஜூடோ, சீலாட், கபடி, சிலம்பம்,  கிரிக்கெட், ஹாக்கி விளையாட்டுகளில் பதக்கங்களை பெருவார்கள்  என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பேரா மாநிலம் 35 தங்கப்பதக்கங்களை வென்று, முதல் ஐந்து இடங்களுக்குள் ஒரு பகுதியாக இருக்க இலக்கு வைத்துள்ளது என்றார்.

கடந்த சுக்மா போட்டியில் பேரா 8ஆவது இடத்தில் இருந்தது.  அது போராட்டத்தின் முடிவு அல்ல, மாறாக, இந்த முறை தடைகளைக் கடந்து தங்களால் இயன்றதைச் செய்ய இது ஆரம்பம் என்றார்.
 
இந்த இலக்கு சாத்தியமற்றது அல்ல, ஆனால் அது சவாலானது. மலை 
உச்சியில் இருக்க வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு எந்த மலையும், ஏற முடியாத அளவுக்கு உயரமாக தெரியாது என்று  ஈப்போவில் உள்ள மாநில செயலக கட்டிடத்தில் சுக்மா போட்டியில் பங்கேற்கவிருக்கும் பேராக் அணிக்கு மாநிலக் கொடியை ஒப்படைத்து ஆற்றிய உரையில் இவ்வாறு பேசினார்.

சுக்மா போட்டியில் தங்க பதக்கங்களை பெறும் போடியாளர்களுக்கு ஊக்குவிக்க நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை செய்தார்.

தனிப்பட்ட தங்கம் வெல்பவர்களுக்கு 5,000 ரிங்கிட், வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு 3,000 ரிங்கிட், வெண்கலப்பதக்கம் பெறுபவர்களுக்கு 1,000 ரிங்கிட் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் செய்தார்.

குழு பிரிவில் தங்கப்பதக்கங்களுக்கு வெ.2,500 ரிங்கிட், வெள்ளிப் பதக்கம் பெறுபவர்களுக்கு 1,500 ரிங்கிட், வெண்கலத்திற்கு 500 ரிங்கிட் வழங்கப்படும் என்றார்.

பயிற்சியாளர்கள், நிர்வாகிகளுக்கு தங்கள் பயிற்சியின் கீழ்  வீரர்களின் சாதனைகளின் அடிப்படையில் ஊக்கத் தொகைகளைப் பெறுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset