நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: 5 வீரர்கள் பலி

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

கதுவா மாவட்டத்தில் உள்ள பத்னோடா கிராமத்தில் ரோந்து பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனங்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் அருகில் இருந்த காட்டுக்குள் தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அதில்  5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset