நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் இருந்து மலேசியா வந்த விமானத்தில் புகைபிடித்த பயணி கீழே இறக்கி விடப்பட்டார்

சென்னை: 

சென்னையில் இருந்து மலேசியா வந்த இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த 
பயணி கீழே இறக்கி விடப்பட்டார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (30), விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார். 

பயணி புகைபிடித்ததால் மலேசியா புறப்பட இருந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. 

விமானம் புறப்படும் முன் இருக்கையில் அமர்ந்தபடி, புகை பிடித்த ஆறுமுகத்துக்கு விமான பணிப்பெண்கள் பயணம் செய்ய அனுமதி மறுத்தனர். 

புகை பிடிக்காமல் தன்னால் இருக்க முடியாது எனக் கூறி அடம் பிடித்த அந்தப் பயணியை கீழே இறக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset