
செய்திகள் தமிழ் தொடர்புகள்
நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை:
நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோர்ப்போம். நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டுமென்று வலியுறுத்தி அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.
இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:
* நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.
* அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை
* சமூகநீதிக்கு எதிரானவை.
* தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்!
நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை! என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 4:04 pm
பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm
செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு
September 9, 2025, 12:07 pm