
செய்திகள் தமிழ் தொடர்புகள்
அண்ணாமலையின் பின்னடைவை ஆட்டு பிரியாணி வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்
கோவை:
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ப.ராஜ்குமார், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலாமணி ஜெகநாதன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் முன்னிலையில் இருந்து வருகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்து வருகிறார்.
கோவை காந்திபுரம் அண்ணா சிலை முன்பு பட்டாசு வெடித்தும், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் திமுகவினர்.
6-ஆவது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 1,51,843 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அண்ணாமலை 1,22,933 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 63,355 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 21,816 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 28,910 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட முன்னிலையில் உள்ளார்.
தொடர்ந்து அண்ணாமலை பின் தங்கி திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருவதால், கோவையில் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். தொடர்ந்து கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் காந்திபுரத்தில் அண்ணாசிலை முன்பு திரண்டு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் திமுகவினர் திரண்டு 2 ஆடுகளை கயிற்றால் கட்டி வைத்துக் கொண்டு, பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை இலவசமாக வழங்கினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 27, 2025, 1:01 pm
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்தது
May 26, 2025, 6:18 pm
ராமநாதபுரத்தில் புயல் சின்னம்: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
May 25, 2025, 12:27 am
தமிழ்நாடு அரசு தலைமை காஜி ஸலாஹுத்தீன் அய்யூபி ஹளரத் காலமானார்
May 24, 2025, 5:31 pm
சென்னை விமான நிலையத்தில் 5 விமானங்கள் ரத்து
May 24, 2025, 5:05 pm
கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்: 62-ஆவது மலர் கண்காட்சி தொடங்கியது
May 23, 2025, 6:47 pm
மே 25, 26 தேதிகளில் இரண்டு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 23, 2025, 10:12 am