நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி துகள்களில் நூற்றுக்கணக்கான நச்சு இரசாயனங்கள்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அம்பலம்

பினாங்கு:

மலேசியா உள்ளிட்ட பதின்மூன்று நாடுகளில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு தரவில் பூச்சிக்கொல்லிகள், தொழில்துறை இரசாயனங்கள்,  மற்றும் பிற நச்சுப் பொருட்கள் உட்பட மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி துகள்களில் கிட்டத்தட்ட 500 இரசாயனங்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து பெறப்பட்ட துகள்களில், ஆய்வு செய்யப்பட்ட இரண்டு மாதிரிகளில் மொத்தம் 123 இரசாயனங்கள் கண்டறியப்பட்டன என பி.ப.சங்கத்தின் தலைவர்  முஹைதீன் அப்துல் காதர் கூறினார்.

இந்த மாத இறுதியில் கனடாவின் ஒட்டாவாவில் நடைபெறும் அனைத்துலக நெகிழி உடன்படிக்கை பேச்சுவார்த்தையில் மலேசியாவை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்பதால், இந்த புதிய தரவு இப்போது மிகவும் பொருத்தமானது என்றார் அவர்.

நச்சுத்தன்மையற்ற எதிர்காலத்திற்காக உழைக்கும் பொதுநலக் குழுக்களின் உலகளாவிய வலையமைப்பான சர்வதேச மாசு ஒழிப்பு வலையமைப்பின்  பங்குபெறும் அமைப்பாக, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இருப்பதால் மறுசுழற்சி நிறுவனத்திடமிருந்து நெகிழிகளை வாங்கி நச்சு இரசாயனங்களுக்காக ஆய்வு செய்தது.

ஸ்வீடன், ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் குழுவினால் இந்த சோதனை நடத்தப்பட்டு இந்த தரவு சமீபத்தில் வெளியிடப்பட்டது என முஹைதீன் தெரிவித்தார்.

மலேசியாவிலிருந்து பெறப்பட்ட முதல் மாதிரியில், மொத்தம் 107 இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இரண்டாவது மாதிரியில் மொத்தம் 111 இரசாயனங்கள் கண்டறியப்பட்டன. 

இந்த இரண்டு மாதிரிகளிலும் 95 இரசாயனங்கள் இருந்தன.

கண்டறியப்பட்ட இந்த 30 இரசாயனங்களில் குளோர்பைரிஃபோஸ் போன்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் மருந்துகள் உட்பட பல உயிர்வேதியியல் பொருட்கள் அடங்கும்.

உலகளாவிய நெகிழி ஒப்பந்தப் பேச்சுக்களில், நெகிழி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான குறிப்பிடத்தக்க கருவியாக நெகிழி மறுசுழற்சியை நம்பியிருக்கும் அணுகுமுறைகளை சில நாடுகள் ஆதரிக்கின்றன. 

ஆனால் புதிய தரவில்  மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியில்  நச்சு இரசாயனங்கள் இருப்பதற்கான  ஆதாரங்கள் இருக்கின்றன.

நெகிழி இரசாயனங்களால் ஏற்படும் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதுடன் நெகிழி உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் அணுகுமுறைகளையும் உள்ளடக்கிய ஒரு பயனுள்ள நெகிழி ஒப்பந்தம் தேவை. 

16,000 இரசாயனங்கள் கொண்டதுதான் நெகிழிகள்.

அவற்றில் குறைந்தது 25% அதிக நச்சுத்தன்மை வாய்ந்ததாக அறியப்படுகிறது, மேலும் மீதமுள்ள பெரும்பாலான இரசாயனங்களுக்கு அவற்றின் மனித ஆரோக்கியம் அல்லது சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய தகவல்கள் இல்லை.

நெகிழி பூச்சிக்கொல்லி கொள்கலன்கள் மறுசுழற்சி செய்யப்பட்டால், நச்சு பூச்சிக்கொல்லிகள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் சேர்ந்துவிடும்.

மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியில் இன்னும் அதிகமான இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. 

இதனால் நெகிழி மறுசுழற்சி வசதிகளில் உள்ள தொழிலாளர்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி பொருட்களைப் பயன்படுத்தும் பயனீட்டாளர், மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியை கையாளும்  பணியாளர்கள் மற்றும் மறுசுழற்சி, கழிவு நடவடிக்கைகளுக்கு அருகில் உள்ள சமூகங்கள் அனைவரும் நச்சு இரசாயனங்களின் வெளிப்பாடுகளால் ஆபத்தில் உள்ளனர் என்பதில் உண்மை. 

மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியிலிருந்து ரசாயனங்கள் பரவுவது தற்போது கண்டுபிடிக்க முடியாததாகவும் கட்டுப்படுத்த முடியாததாகவும் உள்ளது.

புதிய நெகிழி ஒப்பந்தம் நெகிழியில் உள்ள நச்சு இரசாயனங்களை பல வழிகளில் நிவர்த்தி செய்ய ஒரு முக்கிய கருவியாக இருக்க வேண்டும்.

அவ்வாறு செய்ய, ஒப்பந்தத்தில் வலுவான, சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தப்படும் கட்டுப்பாட்டு விதிகள் இருப்பது முக்கியம்.

நெகிழியின் முழுவதும் நச்சு இரசாயனங்கள் நீக்கப்பட வேண்டும்.

ரசாயனங்கள் பற்றிய தகவல்கள் கட்டாயம், பொதுவில் கிடைக்கும்படி செய்ய வேண்டும் இதனால் நெகிழியின் உற்பத்தி குறையும் என முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset